அத்துமீறும் படகுகளை கரைக்கு இழுத்துவாருங்கள்! – அமைச்சர் டக்ளஸ்

இந்திய மீன்பிடிப் படகுகளை கரைக்கு இழுத்துவருமாறு கடற்றொழில் அமைச்சர் பருத்தித்துறை மீனவர்களுக்கு தொலைபேசி ஊடாக அறிவுறுத்தியுள்ளதாக பருத்தித்துறை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லைதாண்டி வந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் விவகாரத்துக்கு தீர்வு எட்டப்படும் வரையில் அரசியல் பிரமுகர்கள் எவர் வந்தாலும் அடித்து விரட்டுவோம் என்று பருத்தித்துறை முனை பகுதி மீனவர்கள் நேற்று தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று மாலை தொலைபேசி ஊடாக மீனவப் பிரதிநிதிகளைத் தொடர்புகொண்ட கடற்றொழில் அமைச்சர் பேசியுள்ளார்.

எல்லைதாண்டி அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீன்பிடிப் படகுகளை கரைக்கு இழுத்துவருமாறும், அதனால் ஏற்படுகின்ற விளைவுகளை தான் பார்த்துக்கொள்வதாகவும் அமைச்சர் கூறியதாக மீனவப் பிரநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply