பெரிய வெங்காயத்தின் விலை 200 ரூபாவாக அதிகரிக்கக் கூடிய சாத்தியம்!

நாட்டில் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 150 ரூபா வரை அதிகரித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்காக 40 ரூபா வரி விதிக்கப்பட்டதே இதற்கு காரணமாகும்.

இறக்குமதி வெங்காயத்தின் மீதான வரியின் தாக்கம் உள்நாட்டு வெங்காயத்தின் கேள்வியை அதிகளவில் அதிகரிக்கச் செய்துள்ளது.

இதனாலேயே பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்வடைந்துள்ளது.

இந்நிலை, தொடருமானால் இன்னும் ஒருவாரத்தில் 200 ரூபா வரை வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply