அலரி மாளிகைக்குள் மோதல் – 8 பேர் காயம்!

<!–

அலரி மாளிகைக்குள் மோதல் – 8 பேர் காயம்! – Athavan News

அலரி மாளிகைக்குள் ஒரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் சைிகிச்சையின் பின்னர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற இந்த மோதலில் காயமடைந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Leave a Reply