நாட்டில் கொரோனா தொற்று இன்னும் ஒரு வருடம் நீடிக்கும் எனவும், ஆரோக்கியமான பாடசாலை மாணவர்களுக்கு கொரோனாத் தடுப்பூசி கொடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
மேலும், சுகாதாரச் சட்டங்களை ஆராய பாடசாலை அளவில் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்தத் தடுப்பூசி தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்தாது.
ஆனால், அறிகுறிகள் தோன்றுவதையும், வைரஸ் தொற்றுக்குப் பிறகு இறப்பையும் தடுக்கிறது.
சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, குறைந்தது 80 வீதம் மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும்.
மேலும், சுகாதாரச் சட்டங்களை கடைப்பிடிக்க மக்கள் மறந்துவிடுவதாகவும், அவ்வாறு செய்தால், மீண்டும் தொற்று தலைதூக்கும் அபாயம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


