கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 63 பேரை திருகோணமலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை பகுதியில் உள்ள விடுதியில் இருந்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், அரச புலனாய்வு பிரிவின் திருகோணமலை அலுவலகம் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி சந்தேக நபர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


