பிரதமர், கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் நிறைவுக்கு வந்துள்ளது.
இன்று மதியம் 12 மணிக்கு ஆரம்பமான இந்த கலந்துரையாடல் சுமார் மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான தங்களது நிலைப்பாட்டை நாளை அறிவிப்பதாக அதிபர், ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


