நவசக்தியின் நவராத்திரி தெய்வங்களின் ஏழாவது சக்திபீடமான கல்வித் தெய்வத்திற்கு உரிய சரஸ்வதி தெய்வ உற்சவம் இன்று, வரலாற்றுச்சிறப்பு மிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.
கருவரையில் வீற்றிருக்கும் ஸ்ரீ நாகபூசணி அம்மனுக்கும் வசந்தமண்டத்தில் அருள்பாலித்து விளங்கும் நவசக்தி தெய்வத்தின் மூன்றாவது தெய்வமாகிய சரஸ்வதிக்கும் விசேட அபிசேக ஆராதனை என்பன இடம்பெற்று சரஸ்வதி வெண்தாமரை பீடத்தில் வீற்று வெண்மலர்களின் மாலையில் அலங்கரிக்கப்பட்ட வீணை ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாட்டில் எற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையினை கருத்திக்கொண்டு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


