இலங்கையை வந்தடைந்தார் சுப்ரமணியன் சுவாமி!

இந்திய பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி இலங்கையை வந்தடைந்தார்.

விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ.சானக மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் விமான நிலையம் சென்று அவரை வரவேற்றனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில், அலரிமாளிகையில் இன்று மாலை நடைபெறும் நவராத்திரி விழாவில் சுப்ரமணியன் சுவாமி கலந்து கொள்ளவுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், இலங்கை இராணுவத்தின் 72 ஆவது நிறைவையொட்டி நடத்தப்படும் இராணுவ கருத்தரங்கிலும் இவர் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply