மன்னாரில் பெரும்போக பயிற்செய்கை ஆரம்பித்துள்ள நிலையில், பாரம்பரிய நெல் செய்கை மற்றும் இயற்கை முறையிலான நெற்செய்கையை ஊக்குவிக்கும் முகமாக, மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோவின்) அணுசரணையில் விவசாயிகளுக்கு ஒரு தொகுதி பாரம்பரிய நெல் விதைகள் இன்று செவ்வாய்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குபட்ட கமநல சேவைகள் திணக்களத்தால், விதைப்புக்கு தயாரான நிலையில் இருந்த 13 விவசாயிகளுக்கு 60 கிலோ பாரம்பரிய நெல் விதைகளும் அவர்களுடைய விவசாய செயற்பாட்டுக்கான செலவாக ஆறாயிரம் ரூபா நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விவசாயிகள் நெற்செய்கை மேற்கொண்டு கிடைக்கும் விளைச்சலில் மற்றும் ஒரு பயனாளருக்கு அறுபது கிலோ விதை நெல் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நானாட்டான் பிரதேச செயளாலர் சிறீஸ்கந்தகுமார் மற்றும் மெசிடோ நிறுவன மாவட்ட குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் நடைபெற்றது.
இச்செயற்திட்டம் வடமாகாணத்தில் சுமார் 100 விவாசாயிகள் தெரிவு செய்யப்பட்டு, நபர் ஒருவருக்கு 60 கிலோ விதைகளும், 6,000 ரூபா பணமும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




