நாட்டில் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நேற்று முதல் சடுதியாக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, மண்ணெண்ணெய் அடுப்புகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதன்படி, கொழும்பு ஐந்து லாம்புச் சந்தியில் மக்களில் ஒரு பகுதியினர் இன்று மண்ணெண்ணெய் அடுப்புகளை வாங்குவதில் மும்முரமாக ஈடுபட்டதை அவதானிக்க முடிந்துள்ளது.
மேலும், முகநூல் மற்றும் விற்பனைக்குரிய இணைய தளங்களிலும் தற்போது மண்ணெண்ணெய் அடுப்பு வியாபாரம் சூடு பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


