நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை , நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 527,584 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இவர்களில் 23ஆயிரத்து 430 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 10ஆயிரத்து 301 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 490,800 ஆக அதிகரித்துள்ளது.


