மதுபானசாலைகளை மூடுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

எதிர்வரும் பூரணை தினம் உள்ளடங்கலாக இரு தினங்களுக்கு, உரிமம் பெற்ற மதுபானசாலைகள் மூடப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி இரு தினங்களிலும் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் வாயிலாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

மேலும் குறித்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், பூரணை தினமான எதிர்வரும் 20 ஆம் திகதி மாத்திரமே மதுபானசாலைகள் மூடப்படும் என்றும் மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply