கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 151 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் முன்னதாக இன்று 520 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 671 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 527,735 ஆக அதிகரித்துள்ளது.
மதுபானசாலைகளை மூடுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு..!
இவர்களில் 23ஆயிரத்து 558 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 10ஆயிரத்து 301 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 490,800 ஆக அதிகரித்துள்ளது.


