எமக்கு பிச்சை போட வேண்டாம் எமது பிரச்சனையை தீருங்கள்; யாழ்.இந்திய துணைத்தூதுவரிடம் யாழ். மாவட்ட மீனவசங்க பிரதிநிதிகள் கோரிக்கை

இந்திய மீனவர்கள் அத்துமீறல் என்பது இரு நாட்டுப்பிரச்சனை, இதில் எங்களுக்கு ஒரு நஸ்டயீடும் வேண்டாம், பிச்சையும் வேண்டாம் எமது எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறாமல் இருந்தாலே போதும் என யாழ் மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் யாழ் இந்திய துணைத்தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். இந்தியத் துணைத் தூதுவருக்கும், யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுக்குமான கலந்துரையாடல் ஒன்று இன்று இரவு யாழ் இந்திய துணைத்தூதுவரது இல்லத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இக் கலந்துரையாடல் தொடர்பாக வடமராட்சி மீனவ சங்க தலைவர் கருத்து தெரிவிக்கையில்,

யாழ் இந்திய துணைத்தூதுவருடன் கொழும்பில் இருந்து வந்த அதிகாரி ஒருவரும் கலந்துகொண்டிருந்தார்.

அவர்களிடம் நாம், எங்களுடைய எல்லைக்குள் வரும் இழுவைப்படகுகளை உங்களுடைய கடற்படையை வைத்து பிடியுங்கள்.உங்களுடைய பொலிசில் ஒப்படையுங்கள்.அப்படி நீங்களே இவர்களைப் பிடித்தால் ஒரு படகும் எங்களுடைய எல்லைக்குள் வராது.

மதுபானசாலைகளை மூடுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

ஏன் உங்களுடைய அரசாங்கத்தால் இந்த செயலை செய்ய முடியவில்லை.இலங்கை எல்லைக்குள் வந்தால் உடனடியாக பிடியுங்கள் என உத்தரவு போடுங்கள்.இந்த விடயத்தை எங்களுடைய அரசாங்கத்திடம் போய் கூற முடியாது.ஆனால் இப்படியொரு விடயம் இடம்பெறுகின்றது மட்டுமே கூற முடியும்.

இவ்வாறு நீங்களே உரிய நடவடிக்கை எடுத்தால் இந்த பிரச்சனை எங்களுக்கும் வராது உங்களுடைய மீனவர்களுக்கும் பிரச்சனை வராது. இந்த இந்தியா இலங்கை மீன்பிடி பிரச்சனையை தீர்ப்பது சிறிய விடயம் ஆகவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எமது வருங்கால சந்ததி எவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.இவ்வாறு உங்களுடைய மீனவர்கள் அட்டகாசம் செய்யும் போது எங்களுடைய மக்கள் பயப்பிட்டு கத்துகிறார்கள்.

இவ்வாறு நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இரண்டு தரப்பு மீனவர்களும் அடிபட்டு உயிரிழப்பதா? என கேள்வியெழுப்பியிருந்தோம்

அதற்கு பதிலளித்த அந்த அதிகாரி, இது எல்லாம் எங்களுக்கு விளங்குகின்றது. கொழும்பில் இருக்கும் தூதுவரோடு உரையாடி இதற்கான தீர்வை பெற்றுத்தருவோம் என தெரிவித்தார்.அத்துடன் சரியான தீர்வு ஒன்றை பெறுவதற்கான முயற்சியை எடுக்கிறேன் என கூறினார்.

நாங்கள் அதற்கு பதிலளித்து இருந்தோம் .நீங்கள் இந்த விடயத்தில் சரியான மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி தந்தால் உங்களை நம்புகின்றோம்.அவ்வாறு ஏற்படாவிட்டால் உங்களை நாங்கள் நம்ப தயாரக இல்லை என்று தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Leave a Reply