
யாழ், ஜுலை 12
புதிதாக அமையும் சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதில்லையென தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக தீர்மானமெடுத்துள்ளன. எதிர்க்கட்சியாக அமர்ந்தாலும், அரசின் ஆக்கபூர்வமாக திட்டங்களிற்கு ஆதரவளிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதான தமிழ் தேசிய கட்சிகள் நேற்று சூம் செயலி வாயிலாக இரண்டு முறை கலந்துரையாடல் நடத்தி இந்த தீர்மானத்திற்கு வந்தன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 6 கட்சிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தன.




