வவுனியாவில் ஏற்பட்ட விபத்தால் ஓமந்தை பகுதிக்கு மின் தடை

வவுனியாவில் ஏ9 வீதியில் மாணிக்கவளவு சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் ஓமந்தை பகுதிக்கான மின் தடைப்பட்டுள்ளது.

இன்று (13) அதிகாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கன்டர் ரக வாகனம் மின் கம்பமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டதுடன் வாகனம் சேதமடைந்தது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை குறித்த விபத்தினால் மின் கம்பம் உடைந்து வீழ்ந்து ஓமந்தை பகுதியின் சில கிராமங்களுக்கான மின்சாரம் அதிகாலை 3 மணியில் இருந்து தடைப்பட்டுள்ளது.

Leave a Reply