மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள் விலக வேண்டும்! அஸ்கிரிய, மல்வத்து பீடாதிபதிகள்

மக்களினால் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள் விலக வேண்டுமென அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த துரதிஸ்டவசமான நிலைமையிலிருந்து நாட்டு மக்களை மீட்குமாறு ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் பல சந்தர்ப்பங்களில் கூறிய போதிலும் அதனை கண்டுகொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட சிலர், அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்தனர்.

இதன் போது மக்களினால் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள் விலக வேண்டுமென அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மக்களின் நலனுக்காக நாடாளுமன்றின் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply