விவசாயிகள், மீனவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி போராட்டம்! – சுமந்திரன்

விவசாயிகள், மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்மைப்பு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும், அரசியல் கடந்து அனைவரும் ஒன்றிணையுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ் அழைப்பை விடுத்துள்ளார்.

மேலும், எதிர்வரும் 18 ஆம் திகதி வடக்கு, கிழக்கின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கமநல சேவை நிலையங்களின் முன்போராட்டம் முன்னெடுக்கப்படும்.

இராசாயன உரத்தை நிறுத்திவிட்டு இயற்கை பசளைக்கு மாறுமாறு உத்தரவிட்ட அரசு அதற்கான போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இம்முறை பசளை கிடைக்கும் வரை போராட்டம் நடத்தப்படும்.

இந்திய இழுவைப்படகுகளால் சுற்றுச்சூழல் பாதிப்படையும், வளங்களை அழிக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும். எனவே, இதனை தடை செய்யுமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பான சட்டமூலத்தை கொண்டுவந்தேன், ஆனால் அது துரதிஸ்டவசமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்தியாவிலே அப்போது இந்திய வெளியுறவுச் செயலகத்தால் மீனவர்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டது.

அதனால், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுதல் குறைந்திருந்தது. ஆனால், அரசு குடுவரவு குடியகல்வு சட்டமே பிரயோகிக்கப்பட்டது. இதனால், இந்திய மீனவர்களுக்கு பயமில்லாது போய்விட்டது.

இச் சட்டம் உருவாக்கிவிட்டார்கள் என்று அறிந்தே வருவதை நிறுத்தினார்கள். இச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தினால் இதனை முழுமையாக நிறுத்தமுடியும்.

யாழ்ப்பாணத்தைச் சேர்நத ஒருவர் அமைச்சராக இருக்கிறார், அவர் இச் சட்டமூலத்தை உபயோகிக்க வேண்டும். ஆனால், அவர் இதனை அமுல்படுத்த தயங்குகிறார். அமுல்படுத்தமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

வன்முறையைத் தூண்டுகிறவர் தான் அமைச்சராக இருக்கிறார். மக்கள் வன்முறையில் இறங்கவேண்டாம்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கடலில் கறுப்பு கொடிகளை கட்டி முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை வரை போராட்டம் செய்யவுள்ளோம்.

மேலும், முல்லையில் இருந்து பருத்தித்துறை வரை படகில் ஊர்வலமாக வருவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply