பணவீக்க சுட்டெண்ணில் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை மூன்றாவது இடத்தில் !!

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் உலகப் பொருளாதார நிலை குறித்த மாதாந்த பணவீக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பணவீக்க அறிக்கையின்படி, கடந்த மாதம் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை, இந்த மாதம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளமையை சுட்டெண் காட்டுகிறது.

கடந்த மாதம் மூன்றாவது இடத்தில் இருந்த துருக்கி இந்த மாதம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ள அதேவேளை பணவீக்கக் குறியீட்டில் 191.60% என்ற அளவில் சிம்பாப்வே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்கின் பணவீக்கக் குறியீட்டில் 21% பணவீக்க விகிதத்துடன், பாகிஸ்தான் 12வது இடத்தில் உள்ளது.

Leave a Reply