ஸ்தம்பிக்கப்போகும் மருத்துவமனை நடவடிக்கைகள்! மீண்டும் எச்சரிக்கை

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைகளுக்குச் செல்வதில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

மருத்துவ ஊழியர்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

கொழும்பிற்கு வெளியே வசிக்கும் சுகாதார ஊழியர்கள் நகரத்திற்கு செல்வதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டிய அவர், சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருளை வழங்கும்போது பாதுகாப்பு கவலைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply