
அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிப்பு!
தற்போது அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் அறுவடைக்கான எரிபொருள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை, இதன் காரணமாக ஒரு லிட்டர் டீசலினை 1200 ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொடுத்து கொள்வனவு செய்து அறுவடையினை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் வைத்திருந்த போதிலும் எரிபொருள் இல்லாத நிலையில் வெளிமாவட்டத்திலிருந்து வியாபாரிகள் வருகை தராததால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை தொடர்ச்சியாக உலர விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நெல்லினை குறைந்த விலைக்கே கொள்வனவு செய்ய வியாபாரிகள் முயற்சிக்கின்றனர் எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அரசாங்கம் நெல்லுக்கான விலையினை அறுவடையின் ஆரம்பக்காலப்பகுதியிலே தீர்மானிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




