74 வருட குடும்ப அரசியல் களவாணிகளாலே நாடு பின் தள்ளப்பட்டது-சந்திரசேகரன் கவலை!

74 வருட குடும்ப அரசியல் களவாணிகளாலே நாடு பின் தள்ளப்பட்டது என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார் .

இன்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்பொழுது நாட்டில் நடைபெறுகின்ற முக்கியமான நிகழ்வுகளை மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டிய இருக்கிறது . கடந்த 3 மாதங்களாக நடை பெரும் மக்களினுடைய போராட்டம் கடந்த 9ம் திகதி வெற்றி பெற்றுள்ளது . இரவு பகல் என்று பாராது , அச்சம் கொள்ளாது செயற்பட்ட அனைத்து மக்களிற்கும் எங்களுடைய நன்றிகளும் ,வாழ்த்துக்களும் .

கடந்த 74 வருடமாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் ,பாதாளத்தில் தள்ளியது மட்டுமல்லாமல் பவித்தனமான செயற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டனர் . இச் செயற்பாடுகளே இப் போராட்டத்திற்கு காரணம் .

இவர்களுடைய கலாச்சாரம் மிகவும் கேவலமான கலாச்சாரமாகும் ,தன்னை பற்றியும் , தன் குடும்பம் ,தன் பிள்ளை ,தன் வயிறு என சிந்திக்கும் கலாச்சாரம் ஆகும் .

சுய அறிவற்ற அரசியலால் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள பட்டோம் , தொடர்ச்சியான போராட்த்தின் வெற்றியே இதுவாகும் . இந்த வெற்றியை பெற்று தந்த போராட்டகாரர்களை நாம் மறந்து விட கூடாது .

இந்த ஒழுங்கற்ற அரசியல் முறைமையில் மக்கள் வாடி வதங்கி விட்டனர் . நாடு முழுவதுமாய் ஸ்தம்பித்துபோய் உள்ளது. காரணம் இவர்கள் இயற்கை அனர்த்தங்கள் அல்லது வேறு நோய் பிரச்சனைகள் என்றால் கூட பரவாயில்லை இயற்கை அனர்த்தினால் இவ்வாறு நாடு பின் தங்கி விட்டது எனலாம் . இது அவ்வாறு கிடையாது இது 74 வருட அரசியல் கொள்ளை காரணமாகவே இவ்வாறு நாடு உள்ளது .

இந்த குடும்ப அரசியல் பற்றி மக்கள் எந் நேரமும் மக்கள் ஒரு முணுமுனுபுடனே காணப்படுகின்றனர் .

ஜூலை மாதம் 9ம் திகதி உலக வரலாற்றிலே மறக்க முடியாத நாள் ஆகும் எம் மக்களுக்கு .மக்கள் விடுதலை முன்னணியானது ,மக்கள் மத்தியில் மக்களுக்காய் செயல்பட தயாராகவே உள்ளது .

எங்கள் கட்சி சார்பில் மூன்று நபர்கள் பாராளுமன்றத்தில் உள்ளனர் . நாங்கள் மக்களுக்காய் உழைப்பதற்கு தயாராக உள்ளோம் .நாட்டை பொறுப்பேற்றுகொள்ளவும் தயார் .

ஜனாதிபதியும் ,பிரதமரும் பதவி விலக வேண்டும் ,தமது பொறுப்புகளை பாராளுமன்றில் ஒப்படைக்க வேண்டும் . பாராளுமன்றம் இடைக்கால அரசியல் தன்மையை பேணி பின் முழுவதுமாய் ஓர் நிலையான அரசாங்கத்தினை நிலைநாட்ட வேண்டும். எமது நாட்டை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply