கட்டுநாயக்க வானுார்தி தளத்தில் தடுக்கப்பட்டாரா ஜனாதிபதி கோட்டா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வானுார்தி தளத்தின் ஊடாக, நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், இலங்கையின் குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக உத்தியோகபூர்வ தரப்புக்களை மேற்கோள்காட்டி வெளிநாட்டு செய்திச்சேவை ஒள்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவியும் சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்துள்ள இராணுவ தளத்தில் நேற்றைய இரவைக் கழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை புதன்கிழமை பதவி விலகுவதாகவும், அமைதியான அதிகார மாற்றத்திற்கான வழியை தெளிவுபடுத்துவதாகவும் ஏற்கனவே அவர் உறுதியளித்துள்ளார்.

எனினும், தப்பிச்செல்லும் போது தமது சொந்த நாட்டிலேயே சிக்கியுள்ளதாக தெரியவருகின்றது.

73 வயதான ஜனாதிபதி கோட்டாபய, கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, தாம் பதவி விலகுவதற்கு முன் வெளிநாடு செல்ல விரும்பியதாக நம்பப்படுகிறது.

எனினும் குடிவரவு அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டை முத்திரையிட மறுத்துவிட்டனர்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இன்று அதிகாலை குடிவரவு அதிகாரிகளால் தடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் திரும்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து மத்தள மஹிந்த ராஜபக்ஷ வானுார்தி நிலைய குடிவரவு அதிகாரிகளும் தமது கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply