இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய (12) நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 0.24 ரூபாவால் அதிகரித்து 368 ரூபா 30 சதமாகவும்,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 356 ரூபா 95 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 439 ரூபா 09 சதமாகவும் அதேசமயம் பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 422 ரூபா 05 சதமாக பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 370 ரூபா 70 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபா 13 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply