தீவிரமடையும் எரிபொருள் தட்டுப்பாடு; குருநாகல் வைத்தியசாலைக்கு ஏற்பட்ட நிலை!

நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் எரிபொருள் நெருக்கடி காரணமாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு (OPD) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உள்நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட வைத்தியர்களில் 90 வீதமானவர்கள் இப்பிரதேசத்தில் வசிப்பவர்கள் அல்லாததாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் கண்டி அல்லது கொழும்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதாலும் எரிபொருள் தட்டுப்பாடு பாரியளவில் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தயானந்த பண்டார தெரிவித்தார்.

“அப்படியானால் நாங்கள் பஸ் அல்லது ரயிலில் வர வேண்டும். வந்து ஒன்றரை வாரமாகியும் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நாங்கள் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி தெரிவித்ததன் படி, நாட்டின் நிலைமையைப் பொறுத்து வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை வரை சுகாதாரத் துறைக்கு எரிபொருளைப் பெற முடியாது.

எவ்வாறாயினும் வைத்தியசாலை ஊழியர்களின் நடவடிக்கைகள் காரணமாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply