போராட்டக்காரர்களை மேலுமொரு விடயத்துக்கு வேண்டி கொண்ட சுமந்திரன்

கொழும்பு,ஜுலை 12

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகாவிடின் அவர் ஓரிரு நாட்களுக்காவது பதில் ஜனாதிபதியாக பதவி வகிப்பதை தவிர்க்க முடியாது.

போராட்டகாரர்களின் அழுத்தம் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே, இவ்விடயத்திலும் போராட்டக்காரர்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

காலி முகத்திடல் போராட்டகாரர்கள் தமது யோசனைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்கும் வகையில் கொழும்பு தேசிய நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டு மக்களின் போராட்டம் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது. அரசியலமைப்பு உருவாக்கம்,பொருளாதாரம் முன்னேற்றம் உள்ளடங்கலாக போராட்டகாரர்கள் முன்வைத்துள்ள யோசனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக ஏற்றுக்கொள்கிறது என்றார்.

Leave a Reply