சிவில் செயற்பாட்டாளர்களை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்க மத தலைவர்கள் முடிவு!

ஜனாதிபதி நியமனம் தொடர்பில் பொதுவான இணக்கப்பாடு எட்டப்படாவிடின், சிவில் செயற்பாட்டாளர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியில் அதனை முன்மொழியத் தயாராக இருப்பதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஓமல்பே சோபித தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐந்து சிவில் சமூக ஆர்வலர்களை நியமிக்க மதகுருமார்கள் தயாராக இருப்பதாகவும், அவர்களை தேசிய ரீதியில் நியமிக்க அனுமதிக்குமாறு கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்த, சர்வதேச உறவுகளைக் கொண்ட, அரசியல் நோக்கங்கள் அற்ற ஐந்து சிவில் செயற்பாட்டாளர்களை நியமிப்பது தொடர்பில் சிவில் சமூக அமைப்புகள் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளது.

குறித்த நபர்களின் பெயர்களை இப்போது வெளியிட முடியாது. இது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதற்காக சரியான நேரத்தில் விபரங்கள் வெளியிடப்படும்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நாளைய தினம் ஜனாதிபதி பதவி விலகியன் பின்னர் தற்போது மக்கள் வசம் உள்ள ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் போன்ற தேசிய வளங்களை விடுவிக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply