கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயில் கதவினை உடைக்கும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பிலுள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் அப்பகுதியில் பாரியளவான மக்கள் கூட்டம் திரண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கிறது.

கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது பிரதமரின் இல்லத்தை நோக்கி படையெடுத்து வருகிறது.
இந்த நிலையில் பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்





