ஈழத்தமிழ் மக்களுக்கு சிவாஜிலிங்கம் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். புதிய ஒரு இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் அமையப் போகும் நிலையில் ஈழத்தமிழர்களின் நிலை என்ன? முழு2கோடி 20லட்சம் மக்களுக்கான ஒரு பட்டினி இல்லாத நிலையை ஆதரிக்கும் நிலையில் ஈழத் தமிழரின் உரிமைகளின் உரிமைகளை நிலைநாட்டும் கோரிக்கைகளை எங்களுடைய தமிழ் தேசிய அணிகள் முன்வைக்கவேண்டும்.

ஐ.நா மனித உரிமை பேரவையின் ரோம் உடன்படிக்கையின்படி அந்ததந்த நாட்டில் படுகொலைகள் இடம்பெறுமாக இருந்தால் அந்த நாட்டிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டுசெல்ல முடியும்.

நான் அதிலே கையெழுத்திடாத காரணத்தால் தான் இந்த முள்ளிவாய்க்கால் தமிழன படுகொலைக்கு நாங்கள் செல்லாமல் தப்பினோம் என இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார்.

ஆகவே அவர் சிங்கள கிறீஸ்தவராக இருக்கட்டும்

இஸ்லாமிய மக்களாக இருக்கட்டும் ஈழத் தமிழர்களாக இருக்கட்டும் யார் மீதும் படுகொலை ஏவப்படாமல் இருப்பதற்கும் அவ்வாறான ஒரு தேவை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அதேவேளை உங்களுக்கு எவ்வாறு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுகிறதோ அவ்வாறே இணைந்த வடக்கு கிழக்கிலே ஒரு இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும்.

அதேவேளை தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் அவர்களுக்கு பாரம்பரிய தாயகம் இருக்கின்றது. அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை இருக்கின்றது. என்ற அடிப்படையில் அந்த சுயநிர்ணய உரிமையை தீர்மானிக்கின்ற ஒரே நாட்டில் வாழப் போகின்றீர்களா அல்லது சுதந்திர நாடாக செல்லப்போகின்றீர்களா என்ற பொதுசன வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசாங்கத்திடம் வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply