
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாட்டை ஆளும் சக்தி இல்லை , அவர் ஜனாதிபதி ஆவதற்கு மக்கள் ஆதரவும் கிடைக்க போவதில்லை என ஐக்கிய மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார் .
இன்று இடம்பெற்ற சமூகத்தின் ஊடக கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
மேலும் அவர் இது பற்றி கூறுகையில் ,
நாட்டை இவர்களிடம் ஒப்படைத்ததாலேயே இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது . ஜனாதிபதி அற்ற நிலையில் நாடு ரணிலிடம் சென்றுள்ளது . இருந்த பொழுதிலும் மக்களின் ஆதரவு ஒரு பொழுதும் இவருக்கு இல்லை . மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . மக்கள் போராட்டம் நடத்துவதே இவர்கள் செல்ல வேண்டும் ஏன்பதற்காகத்தான் . ஆனால் இவர்களுடைய செயற்பாட்டால் மக்கள் மேலும் தீவிரம் கொள்கின்றனர் . நாட்டில் மேலும் கலவரம் தலை தூக்கும் வாய்ப்பு உள்ளது .
இவர்கள் மக்களின் அபிலாசங்களுக்கு எதிராகவே செயற்படுகின்றனர் . ஆதலால் மக்கள் வீதிக்கு இறங்கத்தான் செய்வார்கள் என ஐக்கிய மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார் .
பிறசெய்திகள்





