பதில் ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்: டிலான் பெராரோரா

கொழும்பு,ஜுலை 13

நாட்டின் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெராரோரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டை ஜனநாயக பாதைக்கு கொண்டு செல்வதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறித்தியுள்ளார்.

தொடர் போராட்டங்கள் நாட்டை அதளபாதாளத்திற்கு இட்டு செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ஸ முன்னர் அறிவித்தமைக்கு அமைய உத்தியோகபூர்வமாக பதவி விலக வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெராரோரா மேலுட் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது இராஜினாமா கடிதத்தை சமர்பிக்காத நிலையில் எதிர்கட்சி தலைவர்கள் உட்பட பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதிக்கு எதிரரான குற்றப் பிரேரணையை அமுல்படுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply