மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் கோட்டாபய

சிங்கப் பூர்,ஜுலை 13

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மாலைதீவுக்கு சென்றுள்ள நிலையில் இன்று (13) சிங்கப்பூர் செல்லவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொதுமக்களின் எதிர்ப்பை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விமானப்படை விமானத்தில் மாலைதீவு நோக்கி புறப்பட்டனர்.

தற்போது அங்கு தங்கியுள்ள ஜனாதிபதி இன்று இரவு மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply