பாதுகாப்பு தரப்பினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்

கொழும்பு,ஜுலை 13

நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இரு தரப்பிலிருந்தும் பலர் காயமடைந்துள்ளதாகவும், நாடாளுமன்றத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபாநாயகர் வாசஸ்தலம் அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தை பாதுகாக்கவும், போராட்டக்காரர்கள் உள்ளே நுழைவதை தடுக்கவும் பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மத்தியில் பேச்சுவார்த்தையை நடைமுறைப்படுத்தி வன்முறைகளைத் தவிர்க்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று மாலையில் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply