பல்லாயிரம் ஒளியாண்டுகளுக்கு அப்பாலுள்ள பிரபஞ்சத்தின் பிரமிப்பான ஒளிப்படங்கள் வெளியீடு!

அமெ­ரிக்க விண்­வெளி மைய­மான நாசா, ஐரோப்­பிய மற்­றும் கனடா விண்­வெளி மையங்­க­ளு­டன் இணைந்து விண்­வெ­ளியை ஆய்வு செய்­வ­தற்­காக உரு­வாக்­கிய ‘ஜேம்ஸ் வெப்’ எனும் தொலை­நோக்கி மூலம் எடுத்த முதல் விண்­வெளி ஒளிப்­ப­டத்தை வெளி­யிட்­டுள்­ளது.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் இந்த ஒளிப்­ப­டத்தை நேற்­று­முன்­தி­னம் வெள்­ளை­மா­ளி­கை­யில் வெளி­யிட்­டுள்­ளார்.இது­கு­றித்து நாசா நிர்­வா­கத் தலை­வர் பில் நெல்­சன் தெரி­விக்­கை­யில்,

எம் பேரண்­டத்­தின் மிகத் துல்­லி­ய­மான படம் இது­தான் என விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்­கள் மெய்­சி­லிக்­கின்­ற­னர்.‘ஜேம்ஸ் வெப்’ என பெய­ரி­டப்­பட்­டுள்ள இந்த தொலை­நோக்கி கடந்த டிசெம்­பர் மாதம் பிரஞ்ச் கயா­னா­வில் இருந்து விண்­ணில் ஏவப்­பட்­டது. மொத்­தம் 5 ரொக்­கெட்­டு­கள் உத­வி­யு­டன் விண்­ணில் இந்த தொலை­நோக்கி ஏவப்­பட்­டது.இந்­தத் தொலை­நோக்கி சூரி­யனை சுற்­றிய புவி வட்­டப்­பா­தை­யில் இருந்து 15 லட்­சம் கிலோ­மீற்­றர் தொலை­வில் நிலை­நி­றுத்­த ப்­பட்­டுள்­ளது.

‘ஜேம்ஸ் வெப்’ தொலை­நோக்­கி­யின் பிர­தான இலக்­கு­க­ளாக இந்­தப் பிர­பஞ்­சத்­தின் முதல் நட்­சத்­தி­ரங்­களை அதா­வது 13.5 பில்­லி­யன் ஒளி­யாண்­டு­கள் தொலை­வில் இருக்­கும் நட்­சத்­தி­ரங்­களை ஒளிப்­ப­டம் எடுப்­பது மற்­றும் வாழத்­த­கு­தி­யான வேற்­றுக்­கி­ர­கங்­க­ளைக் கண்­டு­பி­டிப்­பது ஆகி­யவை உள்­ளன. இந்­த ஒளிப்­ப­டங்­கள் மூலம் அதில் முதல் படியை எடுத்­து­வைத்­தி­ருக்­கி­றது ஜேம்ஸ் வெப் தொலை­நோக்கி.

இந்த நிலை­யில், ‘ஜேம்ஸ் வெப்’ தொலை ­நோக்கி பிர­பஞ்­சத் தின் அரிய ஒளிப் ப­டங்­களை பூமிக்கு அனுப்பிவைத்­துள்ளது.

இதன்­போது பூமி­யி­லி­ருந்து 8 ஆயி­ரத்து 500 ஒளி­யாண்­டு­கள் தொலை­வி­லுள்ள கரீனா நிபுலா பிர­பஞ்­சம், ஆயி­ரத்­து 150 ஒளி­யாண்­டு­கள் தொலை­வில் ஸ்பெக்­டர்ம் பிர­பஞ்­சம், 2 ஆயி­ரம் ஒளி­யாண்­டு­கள் தொலை­வில் உள்ள சதர்ன் ரிங் நிபுலா பிர­பஞ்­சம், 290 மில்­லி­யன் ஒளி ஆண்­டு­கள் தொலை­வி­லுள்ள ஸ்டீபன்ஸ் குவாண்ட் எனப்­ப­டும் 5 விண்­மீன்­க­ளின் தொகுப்பு ஆகிய பிர­பஞ்­சங்­க­ளின் ஒளிப்­ப­டங்­களை ஜேம்ஸ் வெப் தொலை­நோக்கி பூமிக்கு அனுப்பி வைத்­துள்­ளது.

கரீனா நிபு­லா­வின் ‘என்.ஜி.சி. 3324’ என்று பெய­ரி­டப்­பட்­டுள்ள இந்த பகு­தி­யில் இருந்தே நட்­சத்­தி­ரங்­கள் உரு­வா­க­லாம் என்று நாசா விஞ்­ஞா­னி­கள் தெரி­வித்­துள்­ள­னர். நாசா வெளி­யிட்­டுள்ள இந்த ஒளிப்­ப­டங்­கள் பிர­பஞ்­சத்­தின் பல்­வேறு மர்­மங்­களையும் கலைக்­க­லாம் என்­றும் நம்­பப்­ப­டு­கி­றது. இது வெறும் ஆரம்­பம்­தான்– என்­றார்.

இதே­வேளை விண்­வெளி ஆராய்ச்­சி­யில் பிர­தான தொலை­நோக்­கி­யாக இருந்­து­வந்­தது ஹப்­பிள் தொலை­நோக்கி. 1990-ஆம் ஆண்டு நாசா­வால் விண்­ணுக்கு அனுப்­பப்­பட்­டது . இந்­தப் பிர­பஞ்­சத்­தின் வயது 1,380 கோடி ஆண்­டு­கள் எனக் கண்­டு­பி­டிக்க உத­வி­யது ஹப்­பிள் தொலை­நோக்­கியே.ஹப்­பிள் தொலை­நோக்­கி­யை­விட 100 மடங்கு திறன்­மிக்­கது இந்த ஜேம்ஸ் வெப் விண்­வெ­ளித் தொலை­நோக்கி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *