இருவேறு சம்பவங்களில் படுகொலை செய்யப்பட்ட நபர்கள்!

மெதிரிகிரிய – மாரவில பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்விடயம், பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, பொலன்னறுவை – மெதிரிகிரிய பிரதேசத்தில் தனிப்பட்ட பகையொன்றின் காரணமாக நபரொருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரகும்புர, மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், காயமடைந்த நபரை பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
அதேவேளை, புத்தளம் – கொஸ்வாடிய பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் நபரொருவர் கூரிய ஆயுமொன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குடாவௌ – குடாவெ பிரதேசத்தை சேர்ந்த 25 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபரை மாரவில வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *