மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல், மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் அலரி மாளிகையில், நிதி அமைச்சர் மற்றும் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் சிலருக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதுதொடர்பில், எதிர்வரும் தினத்தில் சுகாதார அமைச்சருடனும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இன்று முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *