பெய்ரூட் இருதரப்புக்கு இடையிலான மோதலில் 6 பேர் பலி

லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் உள்ள துறைமுகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

துறைமுகப் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் ஏற்பட்ட வெடிவிபத்தில் 220 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை பெய்ரூட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நீதிபதி ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக சில அமைப்புகள் குற்றம் சாட்டி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தின. அப்போது இருதரப்புக்கு இடையே திடீரென துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

தகவலறிந்து வந்த ராணுவத்தினர் அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலால் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *