இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையைக் கட்டுப்படுத்தக் கோரி முல்லைத்தீவில் தொடங்கிய மீனவர் போராட்டப் படகுகள் பருத்தித்துறையை வந்தடைந்துள்ளன.
அறுபத்துக்கும் மேற்பட்ட படகுகளில் பெருமளவான மீனவர்களும் அரசியல் பிரமுகர்களும் இணைந்து கறுப்புக்கொடிகளைத் தாங்கி பயணித்தனர்.
பருத்தித்துறையில் கண்டன உரைகளும், மனுக் கையளிக்கும் நிகழ்வும் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவிலிருந்து புறப்பட்ட படகுகள் 2 அரை மணி நேரம் பயணித்து பருத்தித்துறையை அடைந்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன் உட்பட்ட அரசியல் பிரமுகர்களும் போராட்டத்தில் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



