எங்கள் மக்கள் கட்சியின் நடவடிக்கைகளால் தன் பதவிக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலுக்காக மட்டுமே எங்கள் மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்ததாகவும், தான் அக் கட்சியின் உறுப்பினர் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், எங்கள் மக்கள் கட்சி தனக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ள அழைக்க முடியாது.
ரத்ன தேரரை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவித்துள்ள எங்களது மக்கள் கட்சி, அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குமாறு தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் தன் அரசியல் நடவடிக்கைகளுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படாது எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தொடர்ந்தும் இருப்பேன் எனவும் அவர்; தெரிவித்துள்ளார்.


