திருகோணமலை, கந்தளாய் பிரதேச விவசாயிகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுக்கு அசேதனப் பசளையை வழங்குமாறு வலியுறுத்தி இன்று இப்போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மேலும், கந்தளாய் போட்டங்காடு சந்தியில் இருந்து கந்தளாய் குளம் வரை நடை பவணியாக விவசாயிகள் கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அசேதனப் பசளை வேண்டும், விவசாயத்துக்கான பசளையை காலத்திற்கு ஏற்றவாறு வழங்குமாறும்; விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இக் கவனயீர்ப்பில் 42 விவசாய சம்மேளனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








