குருநாகல், மெதிரிகிரிய, பெரகும்புர பிரதேசத்தில் இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்றவர் கத்திக் குத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
37 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
தனது வாகனப் பழுதுபார்ப்பு நிலையத்தில் பணி நிறைவடைந்து வீடு செல்லும்போது, இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தடுப்பதற்கு இந்நபர் முயற்சித்துள்ளார்.
அதன்போதே, அவர் மீது பெண்ணொருவர் கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்பின்னர், அங்கிருந்த மற்றொரு பெண், அவரை வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், அவர் உயிரிழந்தார் எனத் தெரியவருகின்றது.
உயிரிழந்த நபருக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பில், கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தினார் எனக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.






