கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மூடப்பட்டிருந்த தனியார் மேலதிக வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, அதற்கான அனுமதியை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாப்பட்டதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கற்றல் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






