நூலிழையில் உயிர் தப்பிய அமைச்சர்!

ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா, விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இவ்விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுள்ளது.

ஊவா பரணகம – ஹாலி எல பகுதியை இணைக்கும் மர பாலத்தில் பயணம் செய்த போது அவர் கீழே விழுந்து திடீர் விபத்துக்குள்ளாகி உள்ளார்.

இத்தகைய பழைய மரப்பாலம் பலவீனமாக இருந்த நிலையில், அவர் கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

எனினும் அவரது பாதுகாவலர்கள் அவரை காப்பாற்றியுள்ளதோடு, டிலான் பெரேரா பாலத்திலிருந்து ஆற்றில் விழவில்லை என்றும் அவருக்கு எத்த்கைய காயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply