ரஷ்யாவில் கொவிட் தொற்றிலிருந்து மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் 70இலட்சத்து 624பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 5ஆவது நாடாக விளங்கும் ரஷ்யாவில் இதுவரை 79இலட்சத்து 92ஆயிரத்து 687பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக இரண்டு இலட்சத்து 23ஆயிரத்து 312பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 34ஆயிரத்து 303பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 997பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஏழு இலட்சத்து 68ஆயிரத்து 751பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *