விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைகளுக்கு தீர்வுவேண்டி வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பெரும்பாலான கமநல சேவை நிலையங்களுக்கு முன்னால் இன்று காலை 9 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில், மூளாயில் உள்ள கமநல சேவை நிலையத்திற்கு முன்னாலும் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஆலோசனையின்படி, வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கந்தையா இலங்கேஸ்வரன் தலையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
உரத்தை தடுத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, விவசாயிகளே நாட்டின் முள்ளந்தண்டு என்று கூறிவிட்டு விவசாயிகளின் முள்ளந்தண்டை முறிக்காதே, உர என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப் போராட்டத்தில் வலி. மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.









