வவுனியா, உளுக்குளம் பகுதியில் விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழந்தார்.
இவ் விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
சிரசுமன ம.வி. நவோதயா பாடசாலையில் கல்விகற்கும் ஹன்சா டில்சான் மிகிரிங்க எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இச்சிறுவன் கட்டுப்பாட்டை இழந்து, மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோதி, அதன்பின், பாரவூர்தி ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது.
இச்சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பில், உளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







