திருகோணமலை கொலை வழக்கு- சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

திருகோணமலை ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியொருவரை, எரியூட்டி படுகொலை செய்த சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில், 17 வயதான செல்வி கேதீஸ்வரன் சாமினி என்ற மாணவி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் அக்கிராமத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கிண்ணியா பொலிசாரினால் கைது செய்யப்ட்டிருந்தனர்.

இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதிமன்றத்தில், இம்மாதம் 15ம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கு விசாரணையை 27ம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 25ம் திகதியன்று இடம்பெறவுள்ளது.

இக்கொலைச் சம்பவம் கடந்த 10.04.2021ம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எரியூட்டப்பட்ட மாணவி கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிகிச்சை பலனின்றி 25.04.2021 திகதியன்று உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள், திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை பிணையில் எடுப்பதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முயற்சித்து வரும் நிலையில், இவர்களை வெளியே விட்டால் இன்னும் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பார்கள், இவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என அக்கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றார்கள்.

அத்துடன் , மாணவியை எரித்து படுகொலை செய்த சந்தேக நபர்களுக்கு ஆதரவாக மனச்சாட்சியுள்ள எந்த சட்டத்தரணிகளும் ஆஜராகக்கூடாது என்றும் அக்கிராம மக்கள் தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

ஆலங்கேணி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இம் மாணவி சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வந்தார்.

இவர் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகக்கூடியவராகவும் விளங்கினார். இவருடைய இழப்பு பாடசாலைக்கும் பெரியதொரு இழப்பாக கருதப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

திடீர் சுற்றிவளைப்பில் கைக்குண்டுடன் ஒருவர் கைது!

Leave a Reply