அடுத்த பதினான்கு நாட்களில் அனைத்து வகை அரிசிகளுக்கும் விலை அதிகரிப்பு!

நாட்டில் உள்ள அனைத்து அரிசி வகைகளும், அடுத்த பதினான்கு நாட்களில் கிலோவிற்கு 25 முதல் 50 ரூபாய் வரை அதிகரிப்பது உறுதி என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுராஜ் ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.

மேலும், அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை அரசு உடனடியாக நிர்ணயிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே, இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தற்போதைய உர நெருக்கடியால் பெரும் பருவத்தில் காணப்படுகின்ற மொத்த நெல் விளைச்சல் 50 சதவீதத்தால் குறைந்துள்ளது.

இதன் காரணமாக நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு பாரியளவில் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான நிலை காரணமாக, எதிர்காலத்தில் ஒவ்வொரு கிலோவிற்குமான அரிசியின் விலை நுகர்வோருக்கு கட்டுப்படியாகாத வகையில் அதிகரிக்கும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

உரப் பிரச்சினை: மக்கள் தூண்டிவிட்ட கட்சியை அம்பலப்படுத்திய விவசாய அமைச்சர்

Leave a Reply