இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர உயிரிழந்தார்.
சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்தார்.
68 வயதுடைய பந்துல வர்ணபுர இலங்கை அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டி 12 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






