முகமாலை வடக்குப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக பொருட்களை வாங்கிக் கொண்டு வந்த நபரொருவர் மீது இனந்தெரியாத குழுவினர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று இரவு 07.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
முகமாலை வடக்குப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக பொருட்களை வாங்கிக் கொண்டு வந்த ஒருவர் மீது இனந்தெரியாத குழுவினர் சரமாரியாக தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
தலை மற்றும் கை கால்களில் பலத்த காயமடைந்த நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகமாலை வடக்கை சேர்ந்த தனபாலசிங்கம் விஜயகாந்த் வயது 47 என்பவர் இவ்வாறு காயமடைந்த நிலையில், பளை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக முகமாலை பகுதியில். சட்டவிரோத செயற்பாடுகள் களவுகள் போன்ற இடம்பெற்று வருவதுடன், தற்பொழுது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலை தொடர்பில் கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதனை உரிய அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






